ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதித்து வருகின்றனர். அவர்கள் தற்போது கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். நம் நாட்டு ராணுவத்தின் முப்படைகளில் ஆண்களே அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் முப்படைகளிலும் அதிக அளவில் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக பீகாரைச் சேர்ந்த சப் லெப்டினன்ட் ஷிவாங்கி தேர்வாகியிருக்கிறார். அவர் இன்று கொச்சி கடற்படை தளத்தில் கடற்படையில்  இடம் பெறும் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார். துணை அட்மிரல் ஏகே சாவ்லா விமானிக்கான தகுதியான ‘விங்ஸ்’ பதக்கத்தை ஷிவாங்கிக்கு அணிவித்தார். அங்கு ஷிவாங்கிக்கு கடற்படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 

LEAVE A REPLY