”ப்ளிப்கார்ட்” ஊழியர் வெட்டிக்கொலை…

117
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், மேலகொண்டயார் ஊராட்சி கரையான் மேடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(28). இவர் ப்ளிப்கார்ட்டில் டெலிவரி பாயாக உள்ளார்.  ஜெகதீஸ்வரன் அருகில் உள்ள சிவன்வயல் கிராமத்திற்கு சென்று பொருட்களை டெலிவரி செய்து விட்டு டூவீலரில் திரும்பியுள்ளார். அப்போது பின்தொடர்ந்து டூவீலரில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜெகதீஸ்வரன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக  கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY