5,000 பேருக்கு உணவு….. சச்சின்

124

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள 5,000 பேர் சாப்பிட ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வழங்க உள்ளார்.

இது தொடர்பாக அப்நலாயா என்ற தொண்டு நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ஊரடங்கு காலத்தில், அவதிக்குள்ளாகியுள்ள அப்நலாயாவிற்கு உதவி செய்ய முன்வந்ததற்கு சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். 5, ஆயிரம் பேர் ஒரு மாதம் சாப்பிட தேவையான ரேசன் பொருட்களை, சச்சின் தர உள்ளார். இன்னும் ஏராளமானோர், உங்கள் மற்றும் மக்களின் ஆதரவை எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து சச்சின் வெளியிட்ட டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்த அழிவு காலத்தில், தேவைப்படுவோருக்கு சேவையை தொடர, அப்நாலயாவிற்கு எனது வாழ்த்துகள்.  

LEAVE A REPLY