காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்த வெளிநாட்டுக்குழு மகிழ்ச்சி

180
Spread the love
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பின்னர் அவை தளர்த்தப்பட்டன. இதை அடுத்து, அம்மாநிலத்தின் சூழலை ஆய்வு செய்வதற்காக இரண்டாவது வெளிநாட்டுத் தூக்குழு நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீர் சென்றது.  20 நாடுகளைச் சேர்ந்த 25 பேர் கொண்ட தூதுக் குழுவினர் நேற்று முந்தினம் ஸ்ரீநகரில் ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசிய வெளிநாட்டுத் தூதுக்குழுவினர், ராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து பாதுகாப்பு நிலவரம் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், ஸ்ரீநகரில் உள்ளதால் ஏரியில் படகு சவாரியும் செய்தனர். இந்தியாவுக்கான மெக்சிகோ தூதர் எஃப்.எஸ். லோட்ஃப் கூறும் போது  இங்கே என்ன நடக்கிறது என்பதற்கான முழு விவரமும் கிடைத்துள்ளது. இயல்புநிலை திரும்புவதாக தெரிகிறது. எந்த சிரமங்களும் இல்லை என்று அர்த்தமல்ல. ஆனால், நிலைமையை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதைச் செய்ய அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் என கூறினார். ஜம்மு காஷ்மீர் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தூதுக்குழுவைச் சேர்ந்த ஆப்கானிஸ்தானின் நயீம் தார் காத்ரி, காஷ்மீர் மிகச்சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஃபிராங்க் ஹன்ஸ், காஷ்மீர் அழகான சுற்றுலாத் தலமாக உள்ளதாகவும், சுற்றுலாப் பயணியைப் போல் தாங்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY