பிரான்ஸ் நாட்டில் பிரபல தொழில் நிறுவனமான  விர்ஜின் குழுமத்தின் தலைவராக இருப்பவர் ரிச்சர்ட்  பிரான்சன். கோடீஸ்வரரான அவர் தற்போது இந்தியா வந்திருக்கிறார். மும்பையில் இன்று அவர் அளித்த பேட்டி: எனக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பிரான்ஸில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னுடையை டி.என்.ஏ.வைப் பரிசோதனை செய்தோம். அப்போது எனது டிஎன்ஏ இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. 
 
என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் 1793 ஆம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். அப்போது, என்னுடைய மூதாதையர் ஆர்யா என்ற தமிழகப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
 
இந்தியர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் ஒருவேளை நாம் இருவரும் உறவினர்களாக கூட இருப்போம் என்று விளையாட்டாக கூறுவது உண்டு. விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக எனது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம் பெறும் என்றார் ரிச்சர்டு பிரான்சன்.
 
பிரான்ஸனின் மூதாதையர்களில் ஒருவரான ஜான் எட்வர்ட் என்பவர் 1793 ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னை வந்திருக்கிறார். அங்கிருந்து அவரின் குடும்பம் கடலூருக்கு சென்றிருக்கிறது. அங்கு இவரின் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY