Spread the love

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு: டெல்லியில் ஓடும் மெட்ரோ ரயில்களில் இனி அவைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த இலவச சலுகையை பயன்படுத்த விரும்பாத பெண்கள் கட்டணம் செலுத்தி  பயணம் செய்யலாம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது டெல்லி வாழ் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் பஸ்களுக்கும் விரைவில் விரிவு படுத்தப்படும். டெல்லியின் மெட்ரோ ரயில்களில், பேருந்துகளில் பெரிய அளவில் பெண் தொழிலாளர்கள், சாதாரண வேலைகளில் இருக்கும் பெண்கள் பயணம் செய்து வருவதால் அவர்களின் வருமானத்தில் கணிசமான தொகை மிச்சமாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY