Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க- முதல்வரிடம் பாமக கோரிக்கை!

முதல்வர் விஜயை சந்தித்த பின் பாமக தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்; கவர்னர் உரையில்

இதுகுறித்து அறிவிக்க வேண்டும் என முதல்வர் விஜயை சந்தித்து கோரி வைத்தோம். தவெகவின் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியே ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றியது தான்.தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.நன்றாக செயல்பட்டு வருகின்றது; நிறைய மாற்றங்கள் வந்துள்ளன; ஊழல் பெரியளவில் குறைந்துள்ளது. இன்னும் 2, 3 மாதங்கள் ஆகும். நாம் டைம் கொடுக்க வேண்டும். பெரிய அளவில் நிறைய இடங்களில் ஊழல் குறைந்து இருக்கிறது. இவர்கள் மாறி உள்ளனர். ஆனால் அதிகாரிகள் மனசு இன்னும் மாறவில்லை. அவர்கள் மாறுவதற்கு இன்னும் கொஞ்சம் டைம் ஆகும். ஒரு மாதத்தில் எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு புதிய மின்திட்டங்களும் கொண்டு வரவில்லை. தற்போதைய மின்வெட்டுக்கு திமுகவே காரணம். மேகதாது தமிழகத்தின் உயிர்நாடி. இந்த பிரச்னைகள் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அன்புமணி கூறினார்.

error: Content is protected !!