திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று 600 பேருக்கு தடுப்பூசி

157
Spread the love

திருச்சி காந்தி மார்க்கெட் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக அங்கு இயங்கிய மளிகை கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. மளிகை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து, இது தொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் வியாபாரிகளுடனான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அடுத்த தளர்வுகள் அறிவிப்புக்கு பின்னர் முடிவெடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் காந்தி மார்க்கெட் திறப்பின் போது தடுப்பூசி

போடாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்திருந்தார். இதனை கருத்தில் கொண்டு மளிகை கடைகாரர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் காந்தி மார்க்கெட்டில் நடைபெற்றது. மளிகை கடை உரிமையாளர்கள், மளிகை கடை பணியாளர்கள், அவரின் குடும்பத்தினர் என இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். இதில் 14 பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டனர். இதனை தொடர்ந்து சனிக்கிழமையும் காந்தி மார்க்கெட்டுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

LEAVE A REPLY