சமையலுக்கு தேவையான பொருட்களை வீட்டிலேயே அரைத்து பயன்படுத்துவது மிகவும் குறைந்து விட்டது. அனைத்து விதமான பொடிகளும் பாக்கெட்களி்ல் கிடைப்பதால் இதில் நாட்டம் குறைந்து விட்டது. இருப்பினும் வீட்டிலேயே இவற்றை தயாரித்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர். இதில் கரம் மசாலா பொடி தயாரிக்கும் முறை குறித்து அறிவோம்.

தேவையான பொருள்கள் –
  1. பெருஞ்சீரகம் (சோம்பு) – 100 கிராம் 
  2. பட்டை – 10 கிராம் 
  3. கிராம்பு – 10 கிராம் 
  4. அன்னாசிப்பூ – 10 கிராம் 
  5. ஏலக்காய் – 10 கிராம்                                    

செய்முறை:

  1. எல்லா பொருட்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும். 
  2. அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருட்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.
  3. நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும்.
  4. பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
  5. வீட்டிலேயே தயாரிப்பதால் தூய்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

LEAVE A REPLY