மானியம் இல்லாத சமையல் கேஸ் விலை ரூ 4.50 உயர்வு

44
Spread the love
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி அன்று வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து ஏற்றம், இறக்கம் இருக்கும். அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.  தொடர்ந்து 2-வது மாதமாக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட ஒரு மானியம் இல்லாத சிலிண்டர் ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.4.50 உயர்ந்துள்ளது. மும்பையில் ரூ.3.50 -ம், சென்னையில் ரூ.4-ம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

LEAVE A REPLY