தமிழக அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்புக்கு தற்போது மொழிப்பாடங்களுக்கு (தமிழ், ஆங்கிலம் உள்ளிட்டவை) முதல் மற்றும் இரண்டாம் தாள் என 2 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு தாள்களில் பெறும் மதிப்பெண்களை கூட்டி சராசரி கணக்கிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக அரசு மொழிப்பாடங்களில் இனி இரண்டாம் தாள் தேர்வு இருக்காது. இது ரத்து செய்யப்பட்டு ஒரே தாளாக தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY