கழற்றி விடபார்த்த காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி!

289
Spread the love

டெல்லியில் 24 வயது வாலிபர் ஒருவர் தனது 19 வயது காதலியுடன் விகாஸ்பூரி பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் அந்த வாலிபருக்கு முகத்தில் படுகாயமும், அந்த பெண்ணுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் இது குறித்து எதுவும் பதிவாகவில்லை. அந்த வாலிபரிடம் விசாரித்தபோது காதலி தனது ஹெல்மெட்டை கழற்ற சொல்லவும் கழற்றினேன். அப்போது எனது முகத்தில் ஏதோ ஒரு திரவம் வீசப்பட்டது என்றார். இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவர்தான் ஆசிட் வீசியது தெரிய வந்தது.

காதலன் கடந்த சில மாதங்களாக தன்னிடம் சரி வர பேசவில்லை என்றும், காதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தார். மேலும் வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள இருந்தார். அதனால் ஆசிட்டை அவரது முகத்தில் ஊற்றியதாகவும், தன்மீது சந்தேகம் வராமல் இருக்க தனது முகத்திலும் லேசாக ஆசிட்டை ஊற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY