Spread the love

சர்வதேச சந்தையில் சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் மாறுபடுகிறது. சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.24,264-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் வரை உயர்ந்தது. இன்றைய காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.3,046 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,368-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 104 ரூபாய் வரை உயர்ந்தது.

சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,193 ஆகவும், சவரனுக்கு ரூ.25,544-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 40.70 காசுகளுக்கும், கிலோ ரூ.40,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

LEAVE A REPLY