நீட் தேர்வு மசோதா…..கவர்னரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்…

56
Spread the love
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான ஏ.கே.ராஜன் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமாத கால நிறைவடைய உள்ள நிலையில் இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை,  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில்  நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் முதல்-அமைச்சருடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். நீட் விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதா  குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

LEAVE A REPLY