அரசு பஸ் மோதி பெண் டாக்டர் பலி….

184
Spread the love

நாகர்கோவில் அருள் நகரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ஸ்டெல்லா ஜெனட் (49). இவர்கள் இருவரும் டாக்டர்கள். ஸ்டெல்லா ஜெனட், குமரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அதிகாரியாக உள்ளார். இவர், நேற்று மதியம் தனது மொபட்டில் ஆசாரிபள்ளத்தில் இருந்து டெரிக் சந்திப்பு நோக்கி வந்து கொண்டிருந்தார். நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று ஸ்டெல்லா ஜெனட் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி ஸ்டெல்லா ஜெனட் பஸ்சின் முன் சக்கரத்தில் தவறி விழுந்தார். பஸ் சக்கரம் ஏறியதில் இடுப்பு பகுதி சேதமடைந்து ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று ஸ்டெல்லா ஜெனட் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY