நர்ஸ் வெட்டிக்கொலை… காரணம் என்ன?..

774
Spread the love

தேனி மாவட்டம். ஆண்டிபட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸாக பணிபுரிந்து வந்தவர் செல்வி(46). இவருடைய கணவர் சுரேஷ். இவர்கள் பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் 2வது வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். இந்த குடியிருப்பில் மொத்தம் 9 வீடுகள் உள்ளது. செல்வியின் கணவர் சுரேஷ், மகன் ஹரிஹரன்(18), கமலிகா (12) ஆகியோர் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சமையல் வேலை செய்து வருவதால் அங்கேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று பணி முடித்து பாப்பம்மாள்புரத்தில் வீட்டிற்கு வந்தவர் வீட்டில் உள்ள சாமி கும்பிடும் ரூமில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதற்கு முன்பு மாலை 6.30 மணிக்கு அவரது கணவர் சுரேஷ் போன் செய்தும் எடுக்காததால் சக்கம்பட்டி பகுதியில் உள்ள  இறந்த செல்வியின் அக்கா ஜெயாவின் மருமகன் கார்த்திக் (31)என்பவருக்கு தகவல் கூறியுள்ளனர்.

பின்பு கார்த்திக்கும் அவருடைய மனைவி பிரியாவுடன் என்பவரும் இரவு செல்வியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வெளி கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் கார்த்திக்கும் அவருடைய மனைவிக்கும் ரத்தவாடை அடித்ததால் கதவை உதைத்து தள்ளி உள்ளே சென்று பார்த்தபோது  துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்பு கிச்சன் அருகில் உள்ள ரூமில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்தவுடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த ஆண்டிபட்டி எஸ்பி தங்க கிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த கொலைக்கான விசாரணை அக்கம்பக்கத்தினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY