ஊரடங்கை மீறி ஜெபக்கூட்டம்.. அரசு பள்ளி H.M கைது

389

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குறிச்சி வாய்க்கால் மேடு பகுதியில் மேசியா என்ற பெயரில் ஜெப வீடு நடத்தி வருபவர் ராணி. இவர் செல்லிக் கவுண்டனூர் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜெயராமன் பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் தலைமை ஆசிரியை ராணி கொரோனாவை ஒழித்துவிடலாம் எனக்கூறி ஜெபம் நடத்த குட்டியானை என்று அழைக்கப்படும் டாட்டா ஏஸ் வாகனத்தில் பெரிய குரும்பபாளையம் காலனி பகுதிக்கு டிரம்ஸ் மேளத்துடன், ஜெப பாடல்களை பாடிக்கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது பெரிய குரும்பபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஜெப கோஷ்டியை தடுத்து நிறுத்தி இது குறித்து போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பவானி போலீசார் தடையை மீறி மத ஜெபம் செய்யச் சென்றதாக ராணி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து  தலைமை ஆசிரியையுமான ராணி மற்றும் ஓட்டுநர் சுப்பிரமணி இருவரையும் கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY