பெரம்பலூரில் ஆசிரியர்கள் பெயரில் கடன் வாங்கி மோசடி!

177
Spread the love

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள வேப்பூர் ஏஇஓ அலுவலகத்தில் எழுத்தர் தமிழ்ச்செல்வன். தற்போது இவர் ஓய்வு பெற்று விட்டார். இவர் பணியில் இருந்தபோது ஆசிரியர்களின் வைப்பு நிதியிலிருந்து (GPF) கடனுதவி பெற்று தரும் போது, மாவட்ட கருவூலத்திலிருந்து ஆசிரியர்களுக்கு செலுத்தும் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து மோசடி செய்திருக்கிறார். தற்போதுதான் இது தெரிய வந்ததால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் ஏஇஓ ஜீவரத்தினத்திடம் இது குறித்து கேட்டபோது பணத்தை தமிழ்ச்செல்வனிடமிருந்து  பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளார்.

ஆனால் சொன்னபடி பணத்தை பெற்று தராததால், ஆசிரியர்கள் இது குறித்து சிஇஓ அருளரங்கனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து சிஇஓ, ஏஇஓ ஜீவரத்தினம் மற்றும் தமிழ்ச்செல்வனிடம் துறை ரீதியான விசாரணை நடத்த  உத்தரவிட்டுள்ளார்.

தற்போது 9 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய தொகையை பெற பேச்சுவார்த்தை நடை பெற்று வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போலீசில் புகார் செய்ய முயன்ற ஆசிரியர்களை பணிப் பதிவேட்டை காரணம் காட்டி கல்வித் துறை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY