கடலூர் கலெக்டர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை….

547
Spread the love

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே நாடியம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புசெல்வன். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தற்போது கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார். இதனால் அவரது குடும்பத்தினர் கடலூரில் தங்கி உள்ளனர். பேராவூரணியில் உள்ள வீட்டில் யாரும் இல்லாததால் செல்வம் என்ற காவலாளி நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் வீட்டில் வாட்ச்மேன் மட்டும் இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவில் வீட்டின் பின்பக்கமாக நுழைந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 55 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
 இதுபற்றி கடலூரில் உள்ள கலெக்டர் அன்புசெல்வனுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் அவர் தனது குடும்பத்தினருடன் பேராவூரணிக்கு புறப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேராவூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

LEAVE A REPLY