திருச்சியில் சிக்கிய 20 மூட்டை குட்கா…ஓனர் யார்?

1156
Spread the love

திருச்சி வயலுார் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமான தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வயலுார் ரோடு ராமலிங்க நகர் 5வது குறுக்கு சந்தில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  போலீசார் சோதனையிட வந்ததை அறிந்த அந்த வீட்டில் வாடகைக்கு தங்கிருந்த பக்ரூதீன் என்பவர் தப்பி ஓடி உள்ளார். வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாக அங்கு குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொிய வந்தது. இதனை தொடர்ந்து 20 மூட்டைகளை கைப்பற்றிய போலீசார்,  மினி லோடு வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். கைப்பற்றப்பட்ட குட்கா 100 கிலோவிற்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவான நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

LEAVE A REPLY