• தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சூடாக்கி ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
  • ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.
  • சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
  • நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
  • சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆற வைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
  • கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
  • மஞ்சளை தணலில் இட்டு சாம்பலாக்கி அதில் தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
  • வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் சாப்பிட வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

LEAVE A REPLY