4.21 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து தமிழகம் சாதனை.. விஜயபாஸ்கர்

84
Spread the love

தமிழகத்தில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது.. தமிழகத்தில் இன்று மட்டும் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17, 082 ஆக உயர்ந்துள்ளது.   இன்று மட்டும் சென்னையில் மட்டும் 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் அதிக அளவு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் மட்டும் செய்யப்படுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில் மட்டும் தான் 4.21 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் அதிக அளவு சோதனைகளின் மூலம் தமிழக மருத்துத்துறைக்கு பல்வேறு முக்கிய புள்ளி விபரங்கள்கிடைத்துள்ளன. கொரோனா உறுதி செய்யப்பட்ட 88  சதவீத பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.  12 சதவீதத்தினர் தான் அறிகுறியுடன் இருந்துள்ளனர். அதிலும் 40 சதவீதத்தினருக்கு மட்டுமே காய்ச்சல் இருந்துள்ளது. 10 சதவீத்தினருக்கு இருமல், 9 சதவீதத்தினருக்கு தொண்டை வலி, 4 சதவீதத்தினருக்கு மூக்கில் நீர் வடிதல் இருந்துள்ளது. தற்போது வரை தமிழகத்தில்  0.69 சதவீதம் தான் இறப்பு விகிதமாக உள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்..  

LEAVE A REPLY