பெண் உதவியாளருக்கு “லிப் டு லிப்”.. பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்..

269
Spread the love

இங்கிலாந்து ஹெல்த் மினிஸ்டராக இருந்த மேட் ஹன்காக்கின் உதவியாளராக 43 வயதுடைய கினா கொலடங்கேலோ என்ற பெண் இருந்துள்ளார். இருவரும் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் ஒன்றாக படித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளனர். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்து  சுகாதார அமைச்சகத்தின் கோவிட் விதிமுறைப்படி, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், சந்தோஷத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்த கட்டிப்பிடிப்பதோ, முத்தமிடுவதோ கூடாது.

 

சுகாதார அமைச்சரே கோவிட் விதிமுறைகளை மீறியதால் பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் வெளிவந்த உடன், கினா கொலடங்கேலோ தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். மேட் ஹன்காக்கை பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், பிரிட்டனில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த திறமையாக பணியாற்றிய ஹன்காக் மீது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்பதில் போரிஸ் ஜான்சன் உறுதியாக இருந்தார்.

இதற்கிடையே எதிர்க்கட்சியினரின் தொடர் அழுத்தம் காரணமாக அமைச்சர் மேட் ஹன்காக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார், 

LEAVE A REPLY