43 டாக்டர்கள் பலியா?… திரும்ப திரும்ப விஜயபாஸ்கர் மறுப்பு

148
Spread the love
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி சமீபத்தில் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கொரோனாவிற்கு டாக்டர்கள் பலியான விபரம் தவறாக உள்ளதாகவும், சுகாதாரத்துறை மறைப்பாகவும் கூறியிருந்தார்.. இதற்கு பதில் அளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதயநிதி பொய் கூறுவதாக கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா பலி எண்ணிக்கையை தமிழக அரசு மறைப்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது.. தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஐ.எம்.ஏ.-வின் மாநிலத் தலைவரே இதை மறுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாமல் எந்த செய்தியையும் பரப்ப வேண்டாம். இதுபோன்ற செய்திகள் மருத்துவர்களின் மன உறுதியை குறைக்கும். ஐ.எம்.ஏ. தெரிவிக்கும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்’ என்றார்.

LEAVE A REPLY