மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!….

57

எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனப்பான்மைதான் ஒரு வகையில் நமது வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. தெரியும் என்ற மனநிலையில் இருந்து இயங்குவதுதான் நமக்குத் தெரியாத விஷயங்கள் நம் கண்ணில் புலப்படும்போதுகூட அதை அக்கறை கொடுத்துப் பார்க்க தவறி விடுகிறோம். இயேசு சொன்னதைப் போல கண்ணிருந்தும் குருடர்களாக, காது இருந்தும் செவிடர்களாக நம்மில் பலர் இருப்பதால்தான் திறமை இருந்தும் முன்னேற முடியாமல் போகிறது.

மேலும் நம்முடைய தவறுகளை நாம் அவ்வளவு சுலபத்தில் திருத்திக் கொள்வதில்லை என்பது. தவறு என்று தெரிந்தாலும் நமது செயல்களை நியாயப்படுத்துவது. அப்படி நியாயப்படுத்துவதையே ஒரு பெரிய சமார்த்தியமாக நினைப்பது. இதை குதர்க்க புத்தி என்பர். இது மன அமைதிக்கு வேட்டு வைக்கும் வில்லன். இந்த மனநிலையை மாற்றிக் கொண்டு செயல்படும்போது எடுத்த காரியங்கள் அனைத்தும் திருப்தியாக முடியும் என்கின்றனர் பெரியோர். மனசே ரிலாக்ஸ்!

LEAVE A REPLY