மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!…..

176
Spread the love

கடல் என்பது இன்பத்தின் அடையாளம். கடல் என்பது கடமைகளுக்கும் உரிமைகளுக்கும் இடையில் தேங்கி நிற்கும் செயல் வடிவம். ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று யாராவது கேட்டால், ‘கடல்’ போல இருக்க வேண்டும் என்கின்றனர் ஆன்மிகவாதிகள்.

எதுவெல்லாம் பெரியதோ, அதையெல்லாம் கடலோடு ஒப்பிடுவது மனிதர்களின் பழக்கம். ஞானக்கடல், குணக்கடல், அருட்கடல், அறிவுக்கடல் என்று மனிதர்களுக்கு பெரிதாகத் தெரிவதை எல்லாம் கடல் என்கிறார்கள். உதாரணம் சொல்வதற்குக் கடலை விடப் பெரியது உலகத்தில் உண்டு. ஆனால், கடலை உதாரணம் சொல்வதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. வள்ளுவர் பிறவியைப் பெருங்கடல் என்றார். மனிதப் பிறவி என்பது பெருங்கடலின் குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் மறைபொருள். பெருங்கடலில் நீந்திக் கரை சேர்வது மனிதர்களால் இயலாதது. ஆனால், இறைவனடி சேர்ந்தவர்கள், பிறவிப் பெருங்கடலில் நீந்திக் கரை சேர்வார்கள் என்கிறார் வள்ளுவர். கடலைப்போல நாம் இருக்க, முதலில் கடலைப் போன்ற பரந்த மனம் வேண்டும். அப்படி இருந்தால் எப்போதும் மன அமைதியும் கைகூடும் என்கின்றனர் ஆன்மிக பெரியோர். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

LEAVE A REPLY