மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!…

20
Spread the love

வெற்றி ஒரு மனிதனை எந்த உயரத்திலும் கொண்டு போய் நிற்க வைக்கும். அது அவனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தும். ஆனால், பிரபலமானவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒருவர் தான் தீர்மானமாக நினைக்கும் ஒரு விடயத்தை எண்ணியது போல முடித்து விட்டாலே அது வெற்றி தான். வெற்றியில் அளவுகோல் என்று எதுவும் இல்லை. ஒரு சிறு குழந்தைக்கும் கூட, தான் ஆசைப்பட்ட ஒரு மிட்டாயோ அல்லது ஒரு பொம்மையோ கிடைத்து விட்டால், அதுவும் வெற்றிதான். வெற்றியின் அளவுகோலாக, ஒருவருக்கு தனது மனதில் தான் சாதித்து விட்டோம் என்கின்ற அந்த மகிழ்ச்சியையும், தனுக்குள் ஏற்பட்டுள்ள தன்னம்பிக்கையையுமே அளவுகோலாக கூறலாம். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்…

LEAVE A REPLY