Spread the love
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னை, வேலூர், காஞ்சிரபும், மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வௌியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த வெப்பம் இன்று முதல் குறையும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாம்.சென்னை நகரைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY