Spread the love

சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்ட அறிக்கை: “நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். சேலம், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்” எனத் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே நேற்று திருத்தணியில், 42 டிகிரி செல்ஸியஸ், சென்னை, மதுரை, வேலுாரில், 41 டிகிரி செல்ஸியஸ் வெயில் பதிவானது. கடலுார், நாகை, பரங்கிப்பேட்டை, திருச்சி, 39; பாளையங்கோட்டை, 37 டிகிரி வெயில் பதிவானது. குறைந்த பட்சமாக, கொடைக்கானலில், 20 டிகிரி  வெப்பம் பதிவானது.

LEAVE A REPLY