குன்னூரில் இரவு நேரத்தில் ஜீரோ டிகிரி.. மக்கள் அவதி

113

நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெலிங்டன் ஜிம்கானா, எடப்பள்ளி, பந்துமை, பகாசுரன் மலை அடிவாரப் பகுதிகளில், உறைபனியால் கடந்த இரண்டு நாட்களாக, இரவு நேரங்களில், ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. புல்வெளியில் வெண்மையாக பரந்து கிடக்கும் உறைபனியை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து போட்டோ எடுத்து செல்கின்றனர். பனியால், தேயிலை செடிகள் கருகுகின்றன; பழ உற்பத்தியும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது. இரவு நேரத்தில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குன்னுாரில் தென்மேற்கு பருவமழை குறைவாகவும், வடகிழக்கு பருவமழை அதிகமாகவும், இருக்கும். ஆனால் இந்த ஆண்டு, இரு பருவமழையும், அதிகளவில் இருந்தால், நிலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, பனியின் தாக்கம் அதிரித்துள்ளது என கூறப்படுகிறது. 

LEAVE A REPLY