21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிக கன மழை… 10 மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்”…

865
Spread the love

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை.. இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும். நாளை மறுநாள் (21ம் தேதி) புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும். அதேபோல் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

வரும், 22ம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கரூர், கடலுார், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மிக கன மழை என 21, 22 தேதிகளில் 10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. 

LEAVE A REPLY