24 மணி நேரத்தில் கனமழை!

188

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். விழுப்புரம் , புதுக்கோட்டை, கடலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY