இளம் நடிகர் கொரோனாவுக்கு பலி…

532
Spread the love
கன்னட நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் (35), இவர் கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா போன்ற படங்களை தயாரித்து நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்தப் படத்தை வருகிற ஜூன் 22-ந் தேதி தனது பிறந்த நாளன்று வெளியிடவும் திட்டமிட்டிருந்தார்.
 
இந்நிலையில், நடிகர் மஞ்சுநாத்துக்கு, கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோன இருப்பது உறுதியானது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை  திடீரென மோசமடைந்தது. 
 
டி.எஸ்.மஞ்சுநாத்
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.  கன்னட திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY