வெளிநாட்டில் சிக்கியிருந்த மெடிக்கல் மாணவர்கள்.. சென்னைக்கு அனுப்பி வைத்த நடிகர்..

69
Spread the love
தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் சோனு சூட். படத்தில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோ என்று ஊரடங்கு நேரத்தில் நிரூபித்திருக்கிறார் சோனு சூட். இவர் முதலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கினார். பின்னர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல பஸ் வசதி செய்து கொடுத்து உதவினார். இந்நிலையில், வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை, தனி விமானம் மூலம் சென்னை திரும்ப உதவி செய்துள்ளார் நடிகர் சோனு சூட். இதற்கு மாணவர்கள் பலரும் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY