சூட்டிங் போது விபத்து…. ”கயல்” நடிகை காயம்….

158
Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலமாக தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் அழகான வில்லியாக அசத்தினார். நெகடிவ் கதாப்பாத்திரம் தான் என்றாலும், அவரது அழகுக்கும், அதற்கேற்ப அணியும் உடைகளுக்கும் என்றே ஏராளமான ரசிகர்கள்.. யாரடி நீ மோகினி சீரியல் முடிந்த பின்னர் சன் டிவியில், ‘கயல்’ தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ’ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ் நடிக்கிறார். இந்நிலையில் சைத்ரா ரெட்டி கயல் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது வண்டியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்துவிட்டதாக கூறி இருக்கிறார்.

இதுகுறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர் , “கயல் ஷூட்டிங்கில் காயமடைந்துவிட்டேன். ஷூட்டிங்கில் என் கியூட்டான வெஸ்பாவில் இருந்து கீழே விழுந்துவிட்டேன். இந்த சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நன்றாக உணர்கிறேன். மெசேஜ் அனுப்பிய எல்லோருக்கும் நன்றி. Much love” என சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY