யோசித்து பேசுங்க! வைகோவுக்கு கோர்ட் அட்வைஸ்!

248
Spread the love
 வைகோ கடந்த 2009 ஆம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. மேல்முறையீட்டையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பின் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் வைகோ மேல்முறையீடு செய்தார். 
 
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடியும் வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.  
மேலும் நாட்டின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேச வேண்டும் என வைகோவுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள் இந்த வழக்கில் ஆயிரம் விளக்கு காவல்துறை ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
 

LEAVE A REPLY