‘இந்தி தெரிந்தால் தான் வங்கிக்கடன்’ … பேங்க் மேனேஜர் இடமாற்றம்…

117
Spread the love

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார். பாலசுப்பிரமணியன் தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட பணம் தேவைப்பட்டதால், அவர் வங்கிக்கு சென்று லோன் கேட்டுள்ளார்.

அந்த வங்கியில் மேலாளராக இருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல், உங்களுக்கு ஹிந்தி தெரியுமா என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு பாலசுப்பிரமணியன் தனக்கு ஹிந்தி தெரியாது என்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தெரியும் என்றும் பதில் அளிக்க, தான் மகாராஷ்டிராவை சேர்ந்ததால் தனக்கு தமிழ் புரியவில்லை என மேலாளர் கூறியிருக்கிறார். மேலும், ஹிந்தி தெரியாது என்பதால் அவர் பாலசுப்பிரமணியத்துக்கு லோன் வழங்கவும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வங்கி மேலாளர் மீது மருத்துவர் பாலசுப்ரமணியன் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், ஹிந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் விஷால் பட்டேல் திருச்சி மண்டல அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளரிடம் மொழி ரீதியாக வேறுபாடு காட்டியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY