இந்து மகா சபா நிர்வாகி வெட்டிக்கொலை..

234
Spread the love

இந்து மகா சபாவின் மாநில செயலாளராக இருந்து வந்தவர் நாகராஜ்(45). இவரின் வீடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அனுமந்த நகரில் உள்ளது. இன்று காலை அவர் தனது வீட்டின் அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுற்றி வளைக்கப்பட்டு வெட்டி சாய்க்கப்பட்டார். இதில் உடல் முழுவதும் காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓசூர் டிஎஸ்பி முரளி தலைமையில் அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY