சாத்தூர் பெண் குழந்தைக்கு இன்று எச்ஐவி சோதனை

175
Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இளைஞரின் எச்ஐவி பாதிப்புள்ள ரத்தம் ஒரு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை,பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஹெச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு, 45 நாட்களுக்கு பிறகே எச்ஐவி தொற்று இருக்கிறதா? இல்லையா? எனக் கண்டறிய முடியும் என்று தெரிவித்தனர்.  இந்நிலையில் இன்று மதுரை அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு ஹெச்.ஐ.விபரிசோதனை நடைபெற்று வருகிறது. தற்போது வரை பெண் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY