மருத்துவமனை தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் பலி….

114
Spread the love

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 34 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த மருத்துவமனையில் திடீர் என்று தீவிபத்து நடந்தது. இதில் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் ஒரு புறம் தீயை அணைக்க போராடினர். மறுபுறம் நோயாளிகளை வௌியேற்றும் பணியும் நடைபெற்றது. இதில் 29 நோளாளிகள் மீட்கப்பட்டு வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இது

தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்று சட்டீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது. 

LEAVE A REPLY