குவைத்தில் பெண் பணியாளர்களுக்கு வேலை..

297
Spread the love

தமிழ்நாடு அரசு சார்பு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு
நிறுவனத்தால் (Overseas Manpower Corporation, Chennai) குவைத் நாட்டில்
உள்ள M/s.Kuwait Gate Foundation என்ற நிறுவனத்திடமிருந்து குவைத் நாட்டில்
வீட்டு வேலை பணியாளராக பணிபுரிவதற்கு (Housemaid) பெண் பணியாளர்கள்
500 நபர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு வீட்டுப் பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ.32,000/- மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.29,500/- வழங்கப்படும். வயது வரம்பு 30 முதல் 40 வரை. மேலும் மருத்துவ பரிசோதனைக் கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர சலுகைகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்குட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இந்த ஒப்பந்தம் இரண்டு வருடம் வரை நீடிக்கும், ரத்து செய்யாத பட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குவைத் நாட்டில் வீட்டுப் பெண் பணியாளராக பணிபுரிய விருப்பம்உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaidkuwait21@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட வேலைக்கான விவரங்களை www.omcmanpower.com வலைதளம் மூலமாகவும், 044-22505886, 044-22500417 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY