கதிர் ஆனந்துக்கு எப்படி?…அப்செட்டில் தயாநிதிமாறன்

635

வேலூர் தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் இன்னும் எம்பியாக பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம்  சென்னை கோட்டத்திற்குட்பட்ட எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட எம்பிகள் கலந்து கொண்டனர். இதில் சீனியர் எம்பிக்கள் பலரும் குழுவில் உள்ளனர். இதில் கதிர் ஆனந்த் சென்னை கோட்ட ரயில்வே நாடாளுமன்ற குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இன்னும் பதவியேற்றுக் கொள்ளாத நிலையில், கதிர் ஆனந்த் முக்கிய பதவியை பெற்றிருப்பது திமுக சீனியர் எம்.பி.க்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பதவியை தயாநிதிமாறன் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் கதிர் ஆனந்த் அந்தப் பதவியை பெற்றதால் அவர் அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

துரைமுருகன் ஏன் இப்படி செய்கிறார், ஒரு சீனியர் நிர்வாகிக்கு தெரிய வேண்டாமா இவ்வளவு பெரிய முக்கிய பதவியை அரசியலில் சூப்பர் ஜூனியருக்கு கொடுக்கலாமா என்று, வடதமிழக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலுவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். 

LEAVE A REPLY