விட்டுக்கொடுத்து வாழ்றதுதாங்க வாழ்க்கை.”

57
Spread the love

சேர்ந்து முடிவெடுக்கனும். கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி எதுவா இருந்தாலும் நீங்களாவே முடிவு செஞ்சிருப்பீங்க. ஆனா இப்போ, நீங்க சேர்ந்துதான் முடிவெடுக்கனும். ‘சேர்ந்து முடிவெடுக்கும்போது என் இஷ்டப்படி எதுவும் செய்ய முடியாதே’னு நீங்க கவலைப்படலாம். ஆனா, அப்படி செய்றதுதான் ரொம்ப நல்லது. “நானே ஒரு முடிவெடுக்கிறதைவிட கணவரோட பேசி முடிவெடுத்தா, பிரச்சினையை ஈஸியா சமாளிக்க முடியுது”னு அலெக்ஸான்ட்ரா சொல்றாங்க.

மனைவி சொல்றதையும் யோசிச்சு பார்க்கனும். ஜான் காட்மன் என்ற திருமண ஆலோசகர் இப்படி சொல்றார்: “உங்க மனைவி/கணவன் சொல்ற எல்லாத்தையும் நீங்க ஒத்துக்கனும்னு அவசியம் இல்லை. ஆனா, அவங்க என்ன சொல்ல வராங்கனு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. . . . உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினையை பத்தி பேசிட்டு இருக்கும்போது, ‘நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்’ற மாதிரி நடந்துக்காதீங்க. அப்படி செஞ்சீங்கனா, உங்க பிரச்சினைக்கு தீர்வே கிடைக்காது.” * (அடிக்குறிப்பை பாருங்க.)

பிடிவாதமா இருக்கக் கூடாது. ‘நான் பிடிச்ச முயலுக்கு மூனு காலு’னு நினைக்கிற ஒருத்தரோட யாருக்குதான் வாழ பிடிக்கும்! அதனால, கணவனும் மனைவியும் சில சமயம் விட்டுக்கொடுத்துதான் போகனும். இதை பத்தி ஜூன் என்ற பெண் இப்படி சொல்றாங்க: “என் கணவர் சந்தோஷத்துக்காக நான் விட்டுக்கொடுப்பேன்; என் சந்தோஷத்துக்காக அவரும் விட்டுக்கொடுப்பார்; இப்படி விட்டுக்கொடுத்து வாழ்றதுதாங்க வாழ்க்கை.”

LEAVE A REPLY