சமாதானத்திற்கான சில வழிகள்!…

31
Spread the love

கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது.

வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா மனைவிமார்கள் எப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று பார்ப்போம், தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.

சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.

நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார். அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை. 

LEAVE A REPLY