திருச்சியில்1000 கோடி மோசடி..? நெடுஞ்சாலை காண்டிராக்டர்களுக்கு கடிவாளம் எப்போது?..

1333
Spread the love

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகள் கடந்த 5 ஆண்டுகள் போடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் இதில் மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்து இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது.. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 700 கிமீ தூரத்திற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகள் கடந்த  5 ஆண்டுகளில் பல முறை புதியதாக போடப்பட்டுள்ளன. அவ்வாறு போடப்பட்டதில் பல முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருச்சியில் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலை சுமார் 8 கிமீ தூரத்திற்கு விரிவாக்கத்துடன் புதியதாக ரோடு போட்பட்டது. சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் எடுக்கப்பட்டு இந்த பணியினை திருச்சியைச் சேர்ந்த திருக்குமரன் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் மேற்கொண்டது.  இந்த ரோடு போடப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் அந்த ரோடு தரமானதான இல்லை என்றும் டெண்டரில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு ஜல்லி மற்றும் தார் ஆகியவை பயன்படுத்தவில்லை எனவும் புகார் எழுந்தது. மேலும் டெண்டரில் குறிப்பிடப்பட்ட விகிதத்தில் ரோடு போடப்படவில்லை என்கிற அடிப்படையில் குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகள் ரோட்டை வெட்டி எடுத்து பரிசோதனை செய்தனர். டெண்டரில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு ரோடு தரமானதாக இல்லை என்பது உறுதியானதைத் அடுத்து காண்டிராக்டர் திருக்குமரன் பிளாக் லிஸ்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். இவர் திருச்சி-கரூர் பைபாஸ், திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலைகளை விரிவாக்கத்துடன் ரோடு போட்டவர்.

இதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான கிமீ நெடுஞ்சாலைகளில் புதியதாக ரோடு போடப்பட்டன. இந்த பணிகள் சுமார் 30க்கும் மேற்பட்ட காண்டிராக்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. இவையும் த்தும் தரமானதாக இல்லை. இந்த விவகாரம் வெளியில் வரவில்லை. இதற்கு முக்கியக்காரணம் ரோடு பணியினை எடுக்கும் காண்டிராக்டர்கள் தரத்தை பரிசோதிக்கும் குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகளையும் “கவனித்து” விடுவது தான். திருக்குமரன் விவகாரத்தில் திருச்சி குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகள் இல்லாமல் திருப்பூரில் இருந்த அதிகாரிகள் வரழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் 5 ஆண்டுகளில் போடப்பட்ட ரோடுகளை வெளி மாவட்டங்களில் இருந்து குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகளை கொண்டு வந்து சோதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் திருச்சியில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட காண்டிராக்டர்களை பிளாக் லிஸ்ட்க்கு போய் விடுவார்கள். அதேபோல் தற்போது திருச்சி மாவட்டத்தில் போடப்படும் புதிய ரோடு பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்கின்றனர்..இந்த வாரம் திருச்சிக்கு தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் ஏ.வ வேலு ஆய்விற்காக வருகிறார். அப்போது இது குறித்து ஓரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.. 

LEAVE A REPLY