ராமர் கோயிலுக்கு ரூ.1 கோடி வழங்கிய முதல்வர்…

480
Spread the love
மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி சென்று ராமரை வழிபட இருப்பதாக உத்தவ் தெரிவித்து இருந்தார். அதன்படி, அயோத்தி சென்ற அவர், ராமர் கோயிலில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார்.அங்கு அவர் பேசியது: ராமரிடம் ஆசிர்வாதம் பெறவே இங்கு வந்துள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3வது முறையாக வந்துள்ளேன். நானும் பிரார்த்தனை செய்வேன். ராமர் கோயிலுக்காக ரூ.1 கோடி நன்கொடை அளிக்கிறேன். இது எனது மாநில அரசின் சார்பில் அல்ல, எனது அறக்கட்டளையின் மூலமாக அளிக்கிறேன். நான் பாஜ.,விடம் இருந்து தான் பிரிந்துள்ளேன். இந்துத்துவாவில் இருந்து அல்ல. பாஜ., என்றால் இந்துத்துவா என அர்த்தமல்ல; பாஜ., வேறு, இந்துத்துவா வேறு. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY