தமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

354
Spread the love

தமிழகத்தில் இன்று 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விபரம்.. 

* திண்டுக்கல் கலெக்டராக இருந்த விஜயலெட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம்.
* செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராக நியமனம்.
* நாமக்கல் கலெக்டராக இருந்த மேக்ராஜ், நகராட்சி நிர்வாக இணை இயக்குனராக நியமனம்.
* திருப்பூர் கலெக்டராக இருந்த விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக நியமனம்.
* திருவாரூர் கலெக்டராக இருந்த சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம்.
* கரூர் கலெக்டராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.

* மீன்வளத்துறை ஆணையராக கருணாகரன் நியமனம்.
* நில சீர்த்திருத்தத்துறை இயக்குனராக ஜெயந்தி நியமனம்.
* வணிக வரித்துறை இணை ஆணையராக கற்பகம் நியமனம்.
* போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ரா நியமனம்
* தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி நியமனம்.
* பத்திரப் பதிவுத்துறை ஐஜியாக இருந்த ஷங்கர், தமிழ்நாடு காதி, கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்.
* விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம் நியமனம்.
– என மொத்தம் 39 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்களை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY