Spread the love

அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும். தமிழக பல்கலை.கள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. 

ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

இந்த படிப்புகளை படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி
துறை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில், தமிழகத்தின், 8 பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

பெரியார் பல்கலை: எம்.காம்., – கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்.

அழகப்பா பல்கலை: எம்.எஸ்சி., ‘இன்பர்மேஷன் டெக்னாலஜி’.

சென்னை பல்கலை: எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி.

பாரதியார் பல்கலை: எம்.எப்.டி., என்ற, ‘மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்’ மற்றும் எம்.காம்., ‘இன்டர்நேஷனல் வணிகம்’.

எம்.எஸ்சி.யில் கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ.

பாரதிதாசன் பல்கலை: எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ – காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ.

அண்ணாமலை பல்கலை: எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் முறை எம்.சி.ஏ.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,.

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்: எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல்.முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி. இந்த பட்டியல் TNPSC செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்களுக்கும் அனுப்பப்பட்டு
உள்ளது.

LEAVE A REPLY