ஐஐடி மாணவி விவகாரம்.. தாயை விசாரிக்க கேரளா செல்லும் போலீஸ்

178
Spread the love

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐஐடி வளாகத்தில் உள்ள பேராசிரியர்களிடம் 2 – வது நாளான இன்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த கட்டமாக பாத்திமா தற்கொலை விவகாரத்தில் கேரளாவில் அவரது சகோதரி மற்றும் தாயாரை நேரடியாக சென்று விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் பாத்திமாவின் தோழிகள் சொந்த ஊருக்கு சென்று இருப்பதால் அவர்களிடமும் நேரடியாக சென்று விசாரணை நடத்த முடிவு செய்திருக்கின்றனர்.

இதில் முக்கிய ஆதாரமாக கருதப்படுவது பாத்திமாவின் செல்போன் தான், அதை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் மெசேஜஸ்கள் உள்ளிட்ட கடந்த 28 நாட்களாக அவர் பயன்படுத்திய அனைத்து தகவல்களையும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஐஐடி-யில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கு பேராசிரியர்கள் இதுபோன்ற தொந்தரவு கொடுத்திருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த செல்போனின் ஆய்வக முடிவுக்காக தான் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காத்திருக்கின்றனர்.

 

LEAVE A REPLY