கள்ளக்காதலியை அபகரிப்பதில் மோதல்…. – வாலிபர் கழுத்தறுத்து கொலை

398
Spread the love

சேலம் அயோத்தி பட்டணத்தை சேர்ந்தவர் கலைமணி(23). இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு ஒருவருடன் திருமணம் நடைபெற்று கணவை விட்டு பிரிந்து விட்டார். அதன் பின்னர் 2018ம் ஆண்டு வேறொருவருடன் திருமணம் நடைபெற்று அவரையும் விட்டு பிரிந்து விட்டார். 2019ம் ஆண்டு சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் முருகேசனை(29) மூன்றாவதாக திருமணம் செய்து உள்ளார். இந்நிலையில் 2020ம் ஆண்டு முதல் அப்பகுதியை சேர்ந்த கலையரசன்(23) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கலைமணியை சந்திக்க கலையரசன் வரும்போது அவருடன் வந்த கிருபைராஜ்(23) என்பவருடன் 2021(இந்த ஆண்டு) கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் மற்றும் 2 கள்ளக்காதலர் என 3 ஆண்களிடம் உள்ள தொடர்பு ஒருவருக்கு ஒருவர் தொியாமல் கலைமணி மெயின்டேன்(!) பண்ணி வந்துள்ளார். இருப்பினும் ஒரு நாள் குட்டு உடைபடவே இரண்டு கள்ளக்காதலர்களுக்கும் விஷயம் தொிந்தது.  இந்நிலையில் கலைமணி கர்ப்பமாகி உள்ளார். கர்ப்பத்திற்கு நான்தான் காரணம் என்று இரண்டு கள்ளக்காதலர்களுக்குள்ளும் போட்டி ஏற்பட்டு தகராறு மூண்டுள்ளது. இந்நிலையில் உடையாப்பட்டி பக்கமுள்ள கந்தாஸ்ரமம் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று கலைமணியும், கிருபைராஜிம் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை கேள்வியுற்று அங்கு வந்த கலையரசனுக்கும் கிருபைராஜிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கலையரசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கலையரசன் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் கிருபைராஜின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கிருபைராஜ் உயிரிழந்துள்ளார். கலைமணிக்கு கிருபைராஜ் மீது அதிக ஆசை என்பதால் அவரின் சடலத்தை மடியில் போட்டு போலீஸ் வரும் வரை கதறி கதறி அழுதுள்ளார். கீச்சிப்பாளையம் போலீசார்  கலையரசனையும் கைது செய்துள்ளனர். 

LEAVE A REPLY